Search
Thursday 18 October 2018
  • :
  • :

“V”யையும், அஜித்தையும் விடாத சிவா!

அப்படி என்ன திறமையை தான் கண்டாரோ அஜித், சிவாவிடம்?. அஜித்தை வைத்து இயக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க, அவரோ சிவாவை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு, “தல தயவு செய்து அந்த சிவா வேண்டாம்” என்று அஜித் ரசிகர்களே கெஞ்சி வீடியோ அப்லோடினார்கள்.

ஆனால் அது எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், சிவா தான் என் அடுத்தப் படத்தின் இயக்குநர் என்று முடிவெடுத்து ஓய்வுக்குப் போய்விட்டார். வீரம் படத்திற்குப் பிறகு அஜித்திற்கு ரசிகர்களின் துணையால் மட்டுமே வசூல் வந்து கொண்டிருக்கிறது. நடுநிலை ரசிகர்கள் பலருக்கும் அஜித்தின் “சால்ட்&பெப்பெர்” லுக் சலிப்பைத் தர ஆரம்பித்திருக்கிறது.

இந்த சூழலில் தான், “சிவா-அஜித்” கூட்டணியில் வெளியாகிய மூன்றாவது படமாகிய “விவேகம்” அஜித் ரசிகர்களுக்கே திருப்தி அளிக்காமல் போனது. வசூல் ஓகே தான் என்றாலும், ஒரே மாதிரியான மேக்கிங் ரசிகர்களுக்கு ஒட்டவே இல்லை. அதனால் தான் அஜித்திடம், சிவா வேண்டாம் என மன்றாடினார்கள்.

இதோ, மறுபடியும் இந்த கூட்டணி அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டது. பெயர் கூட “விசுவாசம்” என்று வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் சத்யஜோதி ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது.

ஆக மொத்தம், சிவா அந்த “V” செண்டிமெண்டையும் விடுவதாயில்லை.. அஜித்தையும் விடுவதாயில்லை.