Search
Sunday 16 December 2018
  • :
  • :

காலாவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரம்மாண்ட திரைப்படம்!!

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் படம் “காலா”. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தினை தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்ஸ்” தயாரித்திருக்கிறது, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல், அருள்தாஸ், சாக்‌ஷி அகர்வால், மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முதலில் இப்படம், முதலில் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், வருகிற ஜூன் 7-ம் தேதி “காலா” படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், ஹாலிவுட் படமான “ஜுராஸிக் வேர்ல்டு : ஃபால்லன் கிங்டம்” படமும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் ஜூன் 7-ம் தேதி “ஜுராஸிக் வேர்ல்டு : ஃபால்லன் கிங்டம்” வெளியாக இருக்கிறது.

“ஜுராஸிக் வேர்ல்டு : ஃபால்லன் கிங்டம்” குழந்தைகளுக்குப் பிடித்த படம் என்பதால், அந்தப் படத்துடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது “காலா”. இத்தனைக்கும் சொந்த மண்ணில் ஜூன் 22-ம் தேதி தான் “ஜுராஸிக் வேர்ல்டு : ஃபால்லன் கிங்டம்” வெளியாக இருக்கிறது. அதற்கு இரண்டு வாரங்கள் முன்பே இந்தியாவில் வெளியிட்டு கல்லா கட்ட நினைக்கின்றனர் படக்குழுவினர்.